×

7ம் தேதி நடக்கிறது திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க கூட்டம்

விருதுநகர், மே 3: விருதுநகர் மாவட்டத்தில் 7ம் தேதி நடைபெறும் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவோர் விவரங்களை திமுக தலைமை அறிவித்துள்ளது. திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் திமுக சார்பில் நடைபெற உள்ளது. 7ம் தேதி விருதுநகர் வடக்கு மாவட்டத்தில் சிவகாசி தெற்கு ஒன்றியம்-குபேந்திரன், சிவகாசி 2வது பகுதி-அமைச்சர் தங்கம் தென்னரசு, சிவகாசி 5வது பகுதி-கொடி சந்திரசேகர், காரியாபட்டி மேற்கு ஒன்றியம்-சூர்யா வெற்றிகொண்டான், நரிக்குடி வடக்கு ஒன்றியம்-தனசெல்வம், விருதுநகர் வடக்கு ஒன்றியம்-கணேசன் ஆகியோர் சாதனை விளக்க உரையாற்றுகின்றனர்.

விருதுநகர் தெற்கு மாவட்டத்தில் அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றியம்-அந்தோணி மரியராஜ், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம்-வழக்கறிஞர் சரவணன், ராஜபாளையம் மேற்கு ஒன்றியம்-சிவகாசி ஜீவா, ராஜபாளையம் தெற்கு நகரம்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம்-ஏஆர்ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ, சாத்தூர் நகரம்-வெங்கட்ராமன் ஆகியோர் சாதனை விளக்க உரையாற்றுகின்றனர்.

The post 7ம் தேதி நடக்கிறது திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dravida Model Government ,Virudhunagar ,Dravida Model Government's ,Presentation ,Virudhunagar District ,Dinakaran ,
× RELATED திராவிட மாடல் அரசு, இன்னும் பல...